Thursday, 12 March 2015

காதலியுங்கள்
கருப்பும் வெள்ளையும்
கானாமல் போகும்!
காதலியுங்கள்
ஏழை பணக்கார வேடங்கள்
கலைந்து போகும்!
காதலியுங்கள்
வர்க்க பேதம்
வலுவிழந்து போகும்!
காதலியுங்கள்
ஏகாதிபத்தியங்கள்
எரிந்து போகும்!
காதலியுங்கள்
கார்ப்பொரேட் விதிகள்
கானாமல் போகும்!
காதலியுங்கள்
இன வேற்றுமை
இல்லாமல் போகும்!
காதலியுங்கள்
மொழித்திணிப்புகள்
முடமாய் போகும்.
காதலியுங்கள்
மதங்களும் மத வெறிகளும்
மண்டியிட்டு போகும்!
காதலியுங்கள்
சாதியும் சாதிவெறியும்
தானே சங்கருத்துக்கொன்டு சாகும்!
காதல்
புதுமையான ஆயுதம்.
வாருங்கள் தோழர்கள்
இந்த ஆயுதத்தை கையெலுடுப்போம்
புது சமுதாயம் படைப்போம்.
சாதியத்தை சங்கருத்து
இன வேற்றுமையை
ஒழித்து கட்ட - ஆதலினால்
காதல் செய்வோம்....
காதல் திருமண செய்தோருக்கும்
காதல் திருமணம் செய்ய போவோருக்கும்
காதலிப்போருக்கும்
காதல் சொல்ல காத்திருப்போருக்கும்
என் நெஞ்சார்ந்த காதலர் தின வாழ்த்துக்கள்.
கீழ்.கா.அன்புச்செல்வன்...

No comments:

Post a Comment