நூலக காதல்
அது ஒரு கோடை விடுமுறைக்காலம் என் அம்மா எவ்வளவோ வற்ப்புறுத்தியும்
எனக்கு என் பாட்டி வீட்டிற்கு செல்ல மனம் வரவில்லை,என் தங்கையிடமும் நான்
இங்கேயே இருக்கிறேன் என்றும் சொல்லி விட்டேன், வீட்டருகில் ஒரு அழகான
அரசு நூலகம் எந்த வித சப்தமுமில்லாமல் இயங்கிகொண்டிருக்கும், விடுமுறைக்காலம் என்பதால் நானும் அந்த நூலகத்திற்கு வருகை தர
ஆரம்பித்தேன்,
எப்போதுமே தினசரி நாளிதழை மட்டும் வாசித்திருந்த நான் ஒரு முறை
வார இதழ்கள் இருக்கும் பகுதிக்கு சென்றேன் அங்கிருக்கும் ஆன்ந்த விகடன் இதழை எடுக்க
முற்படும் தருனத்தில் இன்னொரு கரமும் அதை எடுக்க முற்ப்படுவதை கவனித்தேன் நிமிர்ந்து
பார்த்த நேரத்தில் வண்ண தேவதையாய் உன் முகம் சற்று புன்னகையுடன் அந்த புத்தகத்தை எடுக்காமல்
விட்டு விட்டாய் அப்போது தான் நமக்குள் பரஸ்பரம் பறிமாறிக்கொண்ட்து,
அன்று முதல் மறவாமல் தினமும் மாலை நேரத்தில் நூலகம் வருவேன்
நீயும் தான் எப்போதுமே நாம் இருவரும் எதிரெதிரிலே தான் அமர்வோம் தினமும் சந்தித்து
கொள்வோம் ஆனால் இருவரும் பேசிக்கொண்ட்தே இல்லை, ஒரு நாள் நான் சற்று
முன்னதாகவே நூலகம் வந்திருந்தேன் சிறிது நேரம் கழித்து நீயும் வந்தாய் நூலக அலுவலர்
வருகை பதி வேட்டை எடுத்து வைக்க முதலில் நான் என் கையெழுத்தை கிருக்கினேன் அதற்க்கு
பின் என்னை தொடர்ந்து நீயும் உன் பெயரை எழுதினாய் அன்று முதல் நான் கர்வப்பட்டுகொண்டேன்
என் பெயருக்கு பின்னல் ஒரு தேவதையின் பெயர் வருகிறதே என்று,
நீ தினமும் வீட்டிற்கு செல்கையில் சில புத்தகங்களை எடுத்து செல்வாய்
அது பெரும்பாலும் காதலை பற்றியதாக இருக்கும் நி படித்து விட்டு திருப்பி கொண்டு வந்த
அந்த புத்தகங்களை நான் எடுத்துச்செல்வேன் அதில் உனக்கு பிடித்த வரிகளை பென்சிலால் கோடிட்டு
வைத்திருப்பாய்,
ஒரு நாள் பழனிபாரதி எழுதிய காதலின் பின் கதவு எனும் கவிதை புத்தகத்தை
எடுத்து சென்றிருந்தாய் அதை எப்போது திருப்பி கொண்டு வருவாய் என்ற ஆவளோடு காத்திருந்தேன்
சில தினங்களின் திருப்பி கொண்டு வந்தாய் அதை எடுத்துச்சென்ற நான் ஒவ்வொறு பக்கமாய்
புரட்டிக்கொண்டிருந்தேன் அதில் ஒரு பக்கத்தில் சில வரிகள்"
இரயில் தண்டவாளத்தில்
தலை சாய்த்திருக்கும் ஒற்றை பூ என் காதல்
நீ நடந்து வருகிறாயா அல்லது
இரயிலில் வருகிறாயா?
என்ற வரிகளை கோடிட்டு வத்திருந்தாய் அந்த வரிகள் என்னை பாதிப்பதாகவே
இருநத்து,
அடுத்தடுத்து நீ கொண்டு செல்லும் எல்லா புத்தகங்களிலும் என்னை
பாதிக்கும் படியே சில வரிகளை கோடிட்டு வைத்திருபாய், என்னை பார்க்கும் போதெல்லாம்
சிறிப்பாய் நானும் சிறிப்பேன் ஆனால் ஒரு போதும் பேசியதில்லை என்ன பெசுவது என்று தெறியாமல்
தடு மாறிக்கொண்டிருந்தேன்,
தினமும் இப்படி வெறும் பார்வையில் மட்டுமே நம் பயனம் சென்று
கொண்டிருந்த்து நாட்கள் இப்படியே கடந்தன, கோடை விடுமுறை காலம் முடியும் தருனம் அப்போது கூட நம் பார்வைக்கான
பதிலை நீயோ அல்லது நானோ தரவில்லை
இன்று கோடை விடுமுறையின் கடைசி நாள் வழக்கத்திற்கு மாறாக 30 நிமிடம் முன்னதாகவே வந்திருந்தேன் நீயும் எனக்கு முன்னதாகவே
வந்து அமர்ந்திருந்தாய்,
நூலகர் வந்து கதவினை திறந்து வருகை பதிவேட்டை எடுத்து வைத்தார்
நான் கையெழுத்திடும் வரை காத்திருந்தாய் இது தான் என் பெயருக்கு பின்னால் கிருக்கப்போகும்
கடைசி கையெழுத்து,
நேரம் கடந்த்து நூலக
கட்காரம் வேகமாய் சுழன்று கொண்டிருந்த்து இதோ நேரம் முடியப்போகிறது நூலகர் அறைக்கதவுகளை
மூடிக்கொண்டிருந்தார் எனக்கோ என் இதய கதவுகள் மூடப்படுவதாய் ஒரு உனர்வு,
நூலகத்தை விட்டு வெளியே வந்தோம் நீ என்னை பார்த்தாய் நானும்
பார்த்தேன் உன்னிடம் பேச முற்படுகிறேன் என்ன பேசுவது எப்படி பேசுவது???
சற்று கன் கலங்கிய படியே நான் நகர்ந்தேன் நீயும் தான் அதன் பின்பு
உன்னை பார்க்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை,
இப்போது நீ எங்கிறுக்கிறாய் எப்படி இருக்கிறாய் எனக்கு எதுவுமே
தெறியாது ஆனால் நீ கோடிட்டு கொடுத்த அந்த காதலின் பின் கதவு புத்தகத்தை நூலகத்திற்கு
திருப்பி தராமல் இன்னும் நான் அபராதம் செலுத்தி கொண்டிருப்பது உனக்கு தெறியாது,,,,,,,,,,
No comments:
Post a Comment