அன்னையர் தினத்துக்காக அம்மாவுக்கு எழுதியது.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பத்து மாசம் பத்தியத்தில்
பக்குவமா பெத்தவளே!
தாயாய் பேறு பற
தவமேற்க்கொண்டவளே.
பக்குவமா பெத்தவளே!
தாயாய் பேறு பற
தவமேற்க்கொண்டவளே.
எத்தனை வளிகளை
என் முகம்கான பட்டிருப்ப.
வேண்டாத சாமியெல்லாம்
வேண்டி என்ன பெத்திருப்ப.
என் முகம்கான பட்டிருப்ப.
வேண்டாத சாமியெல்லாம்
வேண்டி என்ன பெத்திருப்ப.
என்ன வரம் கேட்டாயோ
என்னை நீ பெற்றெடுக்க.
என்ன தவம் செஞ்சோனோ
உன் வயிற்றில் நான் பொறக்க.
என்னை நீ பெற்றெடுக்க.
என்ன தவம் செஞ்சோனோ
உன் வயிற்றில் நான் பொறக்க.
தூசி துறும்பு அண்டாம
தொப்புள் கொடி அறுத்திருப்ப.
கண் மூடி நானுறங்க – நீ
கண் முழிச்சி படுத்திருப்ப.
தொப்புள் கொடி அறுத்திருப்ப.
கண் மூடி நானுறங்க – நீ
கண் முழிச்சி படுத்திருப்ப.
எத்தனையோ துன்பப்பட்டு
என்னை நீ வளத்திருப்ப – அடி மாடா
நீ உழைச்சி என்னயத்தான் படிக்க வச்ச.
என்னை நீ வளத்திருப்ப – அடி மாடா
நீ உழைச்சி என்னயத்தான் படிக்க வச்ச.
கம்மங்கூழ நீ குடிச்சி
எனக்கு அரிசி சோறு கொடுத்திருக்க.
ஆராரோ கதை சொல்ல
என்ன நீ தூங்க வச்ச.
எனக்கு அரிசி சோறு கொடுத்திருக்க.
ஆராரோ கதை சொல்ல
என்ன நீ தூங்க வச்ச.
போட்டியில நான் ஜெயிச்சா
என் மகன் கலக்டருனு
ஊரில் சொல்வ. தாலியெல்லாம்
அடகு வச்ச நான் படிச்சி மேல வர.
என் மகன் கலக்டருனு
ஊரில் சொல்வ. தாலியெல்லாம்
அடகு வச்ச நான் படிச்சி மேல வர.
எத்தனையோ துன்பங்கள
எனக்காக தாங்கிக்கிட்ட.
எத்தனையோ வேதனைய
எனக்காக மறச்சிக்கிட்ட.
எனக்காக தாங்கிக்கிட்ட.
எத்தனையோ வேதனைய
எனக்காக மறச்சிக்கிட்ட.
ஊர் சண்டை
இழுத்து வந்தாலும் எம் பிள்ளை
உத்தமனு சொல்லுவியே.
இழுத்து வந்தாலும் எம் பிள்ளை
உத்தமனு சொல்லுவியே.
பட்டப்படிப்பு நான் படிக்க
பட்டனம் தான் அனுப்பி வச்ச.
இந்த பாவி மகன் செலவுக்கு
மாசம் மாசம் பனம் தந்த.
பட்டனம் தான் அனுப்பி வச்ச.
இந்த பாவி மகன் செலவுக்கு
மாசம் மாசம் பனம் தந்த.
காதல் வந்து
என்ன தீண்ட கவிதையும் எழுதினேனே.
உன்னப்பத்தி நான் எழுத
எப்படியோ மறந்தேனோ.
என்ன தீண்ட கவிதையும் எழுதினேனே.
உன்னப்பத்தி நான் எழுத
எப்படியோ மறந்தேனோ.
காதலிக்கு கவிதையெழுத
தூங்காம முழிச்சிறுக்கேன்.
ஒத்த வரி வார்த்தைக்கு
இரவெல்லாம் காத்திருப்பேன்.
தூங்காம முழிச்சிறுக்கேன்.
ஒத்த வரி வார்த்தைக்கு
இரவெல்லாம் காத்திருப்பேன்.
எத்தனையோ வார்த்தைகள்
உன்னப்பத்தி இருந்தாலும் –
ஒத்த வார்த்த
உன்னை பத்தி இந்த பாவி மகன்
எழுதாம போனேனே.
உன்னப்பத்தி இருந்தாலும் –
ஒத்த வார்த்த
உன்னை பத்தி இந்த பாவி மகன்
எழுதாம போனேனே.
உனக்கு படிக்க தெறியாதுனு
எழுதாம போனேனோ, இல்ல
எழுதியென்ன லாபமென்னு எழுதாம போனேனோ.
எழுதாம போனேனோ, இல்ல
எழுதியென்ன லாபமென்னு எழுதாம போனேனோ.
உன்ன சாமி போல பாத்துக்கத்தான்
வேலைக்கு நான் போனேன்.
காலத்துல கல்யானம்னு
எனக்கும் தான் பன்னி வச்ச.
வேலைக்கு நான் போனேன்.
காலத்துல கல்யானம்னு
எனக்கும் தான் பன்னி வச்ச.
மூனு பிள்ளை பெத்தாலும்
உன் பாசம் குறையலயே.
எனக்கொருத்தி - வந்த பின்பு
என் பாசம் கொறஞ்சிடிச்சே.
உன் பாசம் குறையலயே.
எனக்கொருத்தி - வந்த பின்பு
என் பாசம் கொறஞ்சிடிச்சே.
நான் வாங்கும் சம்பளத்தில்
உன் முகம் தான் தெறியுதும்மா.
குளிர் காற்றில் தூங்கினாலும் – உன்
வியர்வை வாசம் தான் வீசுதம்மா.
உன் முகம் தான் தெறியுதும்மா.
குளிர் காற்றில் தூங்கினாலும் – உன்
வியர்வை வாசம் தான் வீசுதம்மா.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன் கடன் தீராதம்மா.
எத்தனை பேர் வந்தாலும்
உன் பாசம் கிடைக்காதும்மா.
உன் கடன் தீராதம்மா.
எத்தனை பேர் வந்தாலும்
உன் பாசம் கிடைக்காதும்மா.
கோவில் குளம் போக
எனக்கு ஒரு போதும் பிடிக்கலம்மா.
உன் கால் பட்ட இடத்த மட்டும்
தொட்டு கும்பிட ஆசையம்மா.
எனக்கு ஒரு போதும் பிடிக்கலம்மா.
உன் கால் பட்ட இடத்த மட்டும்
தொட்டு கும்பிட ஆசையம்மா.
அடுத்த ஜென்மம்
உனக்கிருந்த என் மகளா பிறக்கனும்மா.
நீ கொடுத்த பாசமெல்லாம்
திருப்பி உனக்கு நான் தரனும்மா.
உனக்கிருந்த என் மகளா பிறக்கனும்மா.
நீ கொடுத்த பாசமெல்லாம்
திருப்பி உனக்கு நான் தரனும்மா.
உன் அன்பு மகன்
கீழ்.கா.அன்புச்செல்வன்
கீழ்.கா.அன்புச்செல்வன்
No comments:
Post a Comment